திருவண்ணாமலை தனியார் மருத்துவக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

திருவண்ணாமலை தனியார் மருத்துவக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-13 01:48 GMT

கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்த கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றும் இன்றும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

முகாமில் பொதுக் கண் நோய்கள் கருவிழி நோய்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள், கண்களில் ஏற்படும் ஒவ்வாமை, குழந்தை பருவ கண் புரை , குழந்தைகளுக்கான பார்வை குறைபாடு , கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, உலர்கண், சதை வளர்ச்சி, கண் நீர் பாதை அடைப்பு, சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, விழித்திரை ரத்த நாள அடைப்பு, பிற சிறப்பு கண் நோய்கள், கண்ணீர் அழுத்த நோய் ,குறைப்பார்வை ,ஆகிய பிரச்சினைகளுக்கு அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சங்கர நேத்ராலயா இணைந்து நடத்திய மருத்துவ பரிசோதனை சிகிச்சை முகாமில் நேற்று சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இம் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக அனுராதா நாராயணன், முதல்வர் எலைட் பார்வை இயல் கல்லூரி ,சங்கர நேத்ராலயா அவர்கள் கலந்து கொண்டு முகாமை தொடங்கி தொடங்கி வைத்தனர்.

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயக்குனர் எ.வ.வே.கம்பன் கூறுகையில், தமிழகத்தில் கண் சிகிச்சைக்கு முன்னுதாரணமாக திகழும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையுடன் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புரிந்துணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .

இதன் மூலம் சங்கர நேத்ராலயாவின் சிறப்பு மருத்துவ குழு வாரம் தோறும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இணைந்து அனைத்து விதமான கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

இதனால் நம் மாவட்டத்தில் உள்ள மக்கள் சென்னை , புதுச்சேரி செல்ல வேண்டிய அவசியம் இல்லை .

இந்த இலவச கண் பரிசோதனை முகாமை நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் கண் பரிசோதனை சிகிச்சை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தெரிவித்தார்.

முகாமில் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைத்தலைவர் குமரன் , மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் குணசிங் , மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் குப்புராஜ் , மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுஷ்மா, சேஷாத்திரி ராஜாராம், உதவி ஆட்சியர் ரஷ்மி ராணி, ஒன்றிய குழு தலைவர் கலைவாணி, பரிமளா கலையரசன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சங்கர நேத்ராலயா மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News