ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

Digital Certificate - மாநில அரசு, குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்.

Update: 2022-07-02 01:22 GMT

பைல் படம்.

Digital Certificate -இதுகுறித்து திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும், தமிழக அரசும் இணைந்து ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் எந்தவித சிரமமும் இன்றி தங்களின் உயிர் வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் அரசுக்கு சமர்ப்பிக்கலாம். இந்த சேவை பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் ஆதார் நகல், மொபைல் எண், பி.பி.ஓ. எண், ஓய்வூதிய கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தபால்காரரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர் கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை எளிதில் சமர்ப்பிக்க முடியும். இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் அஞ்சல் துறையால் வழங்கப்படும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தகவலை திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News