திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-07 11:20 GMT

காங்கிரஸ் கட்சி சார்பில்  நடைபெற்ற  ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி சொத்துகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், 2023-24 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் வெற்றிசெல்வம் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், இந்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆதாரங்களை அதானி குழுமத்திற்கு கடன் வழங்க உதவிய மற்றும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் நிதி ஆதாரத்தை அதானி குழுமத்தின் நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்த பிரதமர் மோடி பதவி விலக கோரியும், அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் அண்ணாச்சி, பொது செயலாளர்கள் கதிர்காமன், குணசேகரன், விவசாய பிரிவு தலைவர் சீனுவாசன், துணைத்தலைவர் வீராசாமி மாவட்ட மகளிரணி தலைவி வினோதினி உள்பட நகர, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஐக்கிய ஜனதா தளம் ஆா்ப்பாட்டம்:

திருவண்ணாமலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா் மணிநந்தன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிா்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆா்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை, பெரிய தெருவில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குச் சொந்தமான அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினா் ஆக்கிரமித்து வைத்துள்ளனா் என்று குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags:    

Similar News