திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-01-10 10:55 GMT

திருவண்ணாமலை ரமணாஸ்ரம பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. இதை கட்டுப்படுத்தும் விதமாக மூன்றாவது தவணையான பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டு வருகிறது.  அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையொட்டி மூன்றாவது டோஸ் தடுப்பூசிகள்,  இன்று ரமணாஸ்ரம இலவச மருந்தகத்தில் செலுத்தப்பட்டன.

இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டு, 9 மாதங்கள் நிறைவடைந்த ஆஸ்ரமவாசிகள் மற்றும் பணியாளர்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் என,  சுமார் 100 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மேலும் 13- 18 வயதினருக்கான தடுப்பூசி ஆஸ்ரம பாடசாலை மாணவர்களுக்கு,   இன்று செலுத்தப்பட்டது. ஆஸ்ரம மருந்தக மருத்துவர் லக்ஷ்மி முன்னிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையை சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் மூலம் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News