உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய, விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Ulavan App - உழவன் செயலியை பதவிறக்கம் செய்து, வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்று, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-02-01 00:12 GMT

‘உழவன்’ செயலி பயன்படுத்த, விவசாயிகளுக்கு கலெக்டர் ்அறிவுறுத்தல் (கோப்பு படம்)

Ulavan App - உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்று, கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் , வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;

வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டம் மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்களை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், 'உழவன்' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

உழவன் செயலியை 'ஆண்ட்ராய்டு' செல்போனில் 'ப்ளே ஸ்டோர்' வழியாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில், விவசாயிகள் தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, செல்பேன் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து கொண்டு, 'உழவன்' செயலியை பயன்படுத்தலாம்.

உழவன் செயலியில் 22 வகை பயன்பாடுகளை விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 'உழவன்' செயலி மூலம், வேளாண் தொடர்பான விவரங்களை விவசாயிகள் வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த தகவல்களுக்கு Youtube-https://www.youtube.com/agridepttn, Facebook-https://www.facebook.com/tnafwd மற்றும் Twitter- https://twitter.com/agridept-tn ஆகிய சமூக ஊடகங்களுடன் இணைந்து, வேளாண் தொடர்பான மானியத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை அறிந்து பயன் பெறலாம்.

இவ்வாறு, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News