திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா , சிறப்பாக கொண்டாடப்பட்டது

Update: 2024-03-02 02:01 GMT

அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம்  

தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நல திட்ட உதவிகள் இனிப்புகள் சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் பணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறப்பு நலத்திட்ட உதவிகள் அன்னதானங்களை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழகம் சார்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின கொண்டாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு திமுக கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அணி அமைப்பாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம் ஜவ்வாது மலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் மலைவாழ் மக்களுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளையும் ஒன்றிய செயலாளர் கேசவன் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்காகவும் குறிப்பாக மலைவாழ் மக்களுக்காகவும் பல நல திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.  அதில் ஜவ்வாது மலையில் உள்ள கோயிலுக்கு குடமுழுக்கு திருப்பணிகள், மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தொழில் பயிற்சி மையம், சுற்றுலா மாளிகை, சுற்றுலா தளமாக இந்த ஜவ்வாது மலையை அறிவித்தது இங்கு பல்வேறு இடங்களில் சாலை வசதிகள் செய்து தந்தது என பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார்கள் என பேசினார்.  இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள், அணி அமைப்பாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செங்கம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் அணியின் சார்பில் தண்டராம்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர்கள் பாண்டுரங்கன், வசந்தகுமார் ஆகியோர் தலைமையில் கழக வழக்கறிஞர்களோடு இணைந்து பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணியில் பார்வையற்றோர் பள்ளியில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 

ஆரணி அருகே உள்ள பத்தியா வரம் பார்வையற்றோர் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் புஷ்பராஜ் தலைமையில் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News