செல்போன் கடையை உடைத்து செல்போன்கள் திருட்டு..!

திருவண்ணாமலையில் செல்போன் கடையை உடைத்து நான்கு லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு

Update: 2024-01-27 11:08 GMT

செல்போன் கடையில் உடைக்கப்பட்ட ஷட்டர்

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் அண்ணா சாலையில் அமைந்துள்ள சாம்சங் ஷோரூம் கடையில் கடையை உடைத்து செல்போன்கள் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அண்ணா சாலையில் அமைந்துள்ளது சாம்சங் ஷோரூம், இங்கு பல விதமான விலை உயர்ந்த செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி பகல் மற்றும் இரவு நேரங்கள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.

நேற்று இரவு வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

காலையில் செல்போன் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது பார்த்து அப்பகுதி மக்கள் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கடை உரிமையாளர் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . மேலும் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த 30000 பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கடையின் உரிமையாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் ,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒருவர் கடைக்குள் சென்று அங்குள்ள விலை உயர்ந்த செல்போன்களை திருடி சென்ற காட்சி பதிவாகியுள்ளது . அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நேற்று நேற்று முன்தினம் கிரிவலம் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த வழியாக கிரிவலம் செல்ல வந்து கொண்டே இருப்பர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதியில் செல்போன் கடையை உடைத்து கைவரிசை காட்டிய பலே மர்ம ஆசாமி, யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News