கோயில்களை அனைத்து நாட்களும் திறக்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

அண்ணாமலையார் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்கவும், கிரிவலத்திற்கு அனுமதிக்கவும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது

Update: 2021-10-07 07:50 GMT

திருவண்ணமலையில் பாஜக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வழிபடவும் 20 மாதங்களாக கிரிவலம் வருவதற்கு விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரியும் திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கரு நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட அமைப்பாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் , நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  அருணை ஆனந்தன்,  மற்றும் பாரதிய ஜனதா நிர்வாக குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர். 

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதா? கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து தடை விதிப்பதை ஏற்க முடியாது. டாஸ்மாக், பள்ளிகளை திறக்க அனுமதியளித்த அரசு, சாமி தரிசனம் செய்யவும் அனுமதியளிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News