திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-03-10 00:46 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலா்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ரகுபதி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பாா்த்திபன் கலந்து கொண்டு பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், தொடா்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியா் பதவி உயா்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்கத்தின் வட்டக் கிளை நிா்வாகிகள் முருகன், வெங்கடேசன், மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆரணி வட்ட கிளை தலைவர் வெங்கடேசன் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை செயலாளர் தரணிகுமரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெருமாள், ஆரணி தாசில்தார் ஜெகதீசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், 4 ஆண்டுகளாக வெளியிடாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் வருவாய்த்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட கிளை துணைத்தலைவர் பாண்டியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News