கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-13 07:00 GMT

திருவண்ணாமலையில் அரசின் உத்தரவை மதிக்காமல் அரியர் தேர்வு கட்டணத்தை மீண்டும் செலுத்த வற்புறுத்தும் திருவள்ளுவர் பல்கலைகழகத்தை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவர்கள் கல்லுாரி நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு அரசு கலை கல்லூரிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் மற்றும் அரியர் தேர்வர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் அரியர் தேர்வு நாளை முதல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ள நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாணவர்களை மீண்டும் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தமிழக அரசின் அரியர் தேர்வர்கள் ஆல் பாஸ் என்ற உத்தரவை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமல்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் ஏற்கனவே செலுத்தப்பட்ட அரியர் தேர்வு கட்டணத்தில் மீண்டும் அரியர் தேர்வை நடத்திட கோரியும் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் கல்லூரியை புறக்கணித்து நுழைவாயில் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News