புனித அந்தோணியார் ஆலய திருவிழா: எம்எல்ஏ தொடங்கி வைப்பு

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;

Update: 2024-05-13 02:51 GMT

னித அந்தோனியார் ஆலய திருவிழாவை தேர் இழுத்து தொடங்கி வைத்த சரவணன் எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வீரளூர் ஊராட்சியில் 54- ஆம் ஆண்டு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை தலைமை செயற்குழு உறுப்பினரும், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான சரவணன் தேர் இழுத்து தொடங்கி வைத்தார்.

அப்போது எம் எல் ஏ பேசுகையில், இந்தக் கோயில் திருப்பணிகள், ஆலய திருவிழாக்கள் சிறுபான்மையினர்களின் நலன் கருதி பல நல திட்டங்களை தமிழக மக்களுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார் .

மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இது போன்ற நல்ல திட்டங்கள் அனைத்தும் செயல்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக அடிப்படை வசதிகள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினராகிய நானும் உங்களுக்காக செய்து கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

மேலும் இந்த கோவிலுக்கு தேவையான திருப்பணிகள் அனைத்தும் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் சென்று அடைகிறது. இதுதான் திமுக ஆட்சி என கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசினார்.

இந்த திருவிழாவில் கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சிவக்குமார், சுப்ரமணியன் மற்றும் கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் , ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி முருகையன், ஒன்றிய அவைத்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் ,மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ,திமுக கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள், அந்தோனியார் ஆலய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News