படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
படவேடு பகுதியில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட வாழைத்தோட்டங்கள் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.;
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள படவேடு பகுதியில் சூரைக்காற்று வீசி மழை பெய்ததால் சுமார் 400 ஏக்கர் வாழை தோப்பு சேதம் அடைந்தது. இதனை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் வடக்கு ஒன்றியத்தில் நேற்று பலத்த மழை பெய்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கத்தில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கனமழை பெய்தது. அணியாலை, காம்பட்டு, பூண்டி, மேலாரணி, வில்வாரணி, சோழவரம், மட்டவெட்டு, பட்டியந்தல், சிறுவள்ளூர் மற்றும் சுற்றுபுற கிராமங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 7 மணி வரை விடாமல் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. மாலை 7 மணி நிலவரப்படி கலசப்பாக்கத்தில் 27 மி.மீ.மழை பதிவானது.
எம்எல்ஏ ஆறுதல்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள படவேடு பகுதியில் சூரைக்காற்று வீசி மழை பெய்ததால் சுமார் 400 ஏக்கர் வாழை தோப்பு சேதம் அடைந்தது. இதனை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆறுதல் கூறினார் .
பின்னர் சரவணன் எம்எல்ஏ கூறுகையில், நேற்று பெய்த சூறைக்காற்று மழை வெள்ளத்தால் படைவேடு பகுதியில் உள்ள கேசவபுரம் பகுதியில் சுமார் 400 ஏக்கர் வாழை தோப்பு சேதமடைந்துள்ளது.
வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து உடைந்து உள்ளன. இதில் ஏராளமான மரங்கள் வாழை கொலை வைத்தும், வாழைப்பூவுடனும் இருந்தது. அனைத்தும் உடைந்தும் சாய்ந்து விட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினராகிய என்னிடம் தகவல் கூறினர்.
அதன் அடிப்படையில் உடனடியாக படவேடு பகுதியில் சென்று சேதமடைந்த வாழை தோப்புகளை பார்வையிட்டு அதில் பாதிக்கப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் சார்பில் நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என கூறியுள்ளேன். மேலும் அரசின் சார்பில் நிதி உதவியும் வழங்குதல் தொடர்பாகவும் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் கலந்த ஆலோசித்து உரிய நிவாரணம் பெற்று தர முயற்சி மேல் கொள்ள உள்ளேன் என சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கூறினார்.தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்..
இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய செயலாளர் சேகர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் முருகன் ஒன்றிய கவுன்சிலர்கள் ,அறங்காவலர் குழு தலைவர் வேணுகோபால், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் ,வேளாண்மை துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,மாவட்ட கவுன்சிலர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்