கலசபாக்கத்தில் எருது விடும் விழா

கலசபாக்கத்தில் எருது விடும் விழாவினை, எம்பி துவக்கி வைத்தார்.

Update: 2024-07-01 02:33 GMT

விழாவினை துவக்கி வைத்த அண்ணாதுரை எம்பி மற்றும் சரவணன் எம்எல்ஏ

கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் பாரம்பரியமான எருது விடும் திருவிழா அண்ணாதுரை எம்பி, சரவணன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் பாரம்பரியமான எருது விடும் விழா திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழாவின் சிறப்பம்சம் என்னவென்றால் எருது விடும் விழாவின் முதல் இடம் பிடிக்கும் எருதுக்கு புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் இரு சக்கர மோட்டார் வாகனம், இரண்டாம் இடம் பிடிக்கும் எருதுக்கு சூப்பர் எக்ஸெல் இருசக்கர மோட்டார் வாகனம், மூன்றாம் இடம் பிடிக்கும் எருதுக்கு ரூ 30,000 , நான்காம் இடம் பிடிக்கும் விருதுக்கு ரூ 20,000 , அதன் தொடர்ச்சியாக 5ஆம் இடம் பிடிக்கும் இடம் பிடிக்கும் எருதுக்கு ரூ 15 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது .

எருதுபிடிக்கும் வீரர்களுக்கும் விருதுகள் 28 வகையான பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் 300க்கும் மேற்பட்ட எருதுகள் போட்டியில் கலந்துகொண்டு விடப்பட்டது .

எருது விடும் விழாவில் நமது தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டு விழா என்பதால் கலசப்பாக்கம் சுற்று வட்டார கிராமத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் எருதுவிடும் விழாவில் கலந்துகொண்டனர். அதுமட்டுமில்லாமல் எருதுவிடும் விழா என்பது நமது ஜல்லிக்கட்டு விடும் விழாவில் சிறப்பு அம்சங்கள் என்னவோ அதேபோல் எருதுவிடும் விழாவிலும் சிறப்பம்சங்கள், விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.

எருதுவிடும் விழா காலை 7 மணி அளவில் கடலாடி காவல்நிலைய அருகாமையில் எருது விடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் எருதுவிடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடலாடி ஊராட்சியில் புதிதாக திமுக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை அண்ணாதுரை எம்பி , சரவணன் எம்எல்ஏ வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி முருகையன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம், ஊர் கவுண்டர் பரசுராமன், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் இளைஞர்கள் என எருது விடும் விழாவில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News