உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு..!

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்;

Update: 2024-06-30 04:31 GMT

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் உள்ள கடையின் இனிப்பு தின்பண்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் "உங்களைத்தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் இரண்டாவது நாளாக நேற்று ஆய்வு செய்தார்.

மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "உங்களை தேடி, உங்கள் ஊரில் என்கிற சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்றைய முன்தினம் கலசப்பாக்கம் வட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் 54 ஊராட்சிகளுக்கு மாவட்ட அளவிலான அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அந்த பகுதிகளில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து நேற்று மேல்வனியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கேட்டறிந்து மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் உள்ள கடையின் இனிப்பு தின்பண்டங்களை ஆய்வு செய்தார்.

மேலும் மேல்வள்ளியனூர் ஊராட்சி அங்கள்வாடி மையத்தை ஆய்வு செய்து பின்பு பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ பிரிவு, நோயாளிகள் காத்திருப்பு அறை, மருந்தகம், கட்டு கட்டும் இடம், அவார சிகிச்சை பிரிவு, பிறப்பு இறப்பு பதிவு செய்யும் இடம், குடுப்பசி போடும் இடம், பிரசவ அறை ஆகியவற்றை ஆய்வு செய்து மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கும் முறைகள் மருந்து இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து கலசபாக்கம் ஊராட்சி, காப்பலூர் சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கலசபாக்கம் கூட்டுறவு கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் இருப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலசப்பாக்கம் வட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் ஆய்வு செய்து உணவின் தரத்தை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் சரண்யா தேவி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர், கலசப்பாக்கம் வட்டாட்சியர், வட்டாரவளர்ச்சி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News