சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜாக்பாட் அடித்த கலசப்பாக்கம் தொகுதி

கலசப்பாக்கம் தொகுதிக்கு பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-06-30 03:37 GMT

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் 

தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு பல வளர்ச்சி திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்துள்ளதால் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய கிளை காவல் நிலையம்

கலசபாக்கம் அடுத்த கடலாடி காவல் நிலையத்தில் புதிதாக ஆதமங்கலம் புதூர் பகுதியில் புதிய கிளை காவல் நிலையம் அமைப்பதற்கு சட்டமன்ற கூட்டத்தில் காவல்துறை மானிய கோரிக்கையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கடலாடி காவல் நிலையத்தில் புதியதாக ஆதமங்கலம் புதூர் பகுதியில் புதிய கிளை அமைத்துக் கொடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது தொகுதி மக்களுக்காக கடலாடி காவல் நிலையத்தில் ஒரு கிளையாக ஆதமங்கலம் புதூர் பகுதியில் புதிய கிளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் இடமும் தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில் 2024-2025 ஆம் ஆண்டின் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் கலசபாக்கம் தொகுதியில் கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள கடலாடி காவல் நிலையத்தில் புதியதாக ஒரு கிளை பிரித்து ஆதமங்கலம் புதூர் பகுதியில் புதிய கிளை காவல் நிலையம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் ஆதமங்கலம் புதூர் பகுதியில் புதிய கிளை காவல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் முதல்வர், அமைச்சர் மற்றும் கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணனுக்கு நன்றி தெரிவித்தனர்.

கோவில்களுக்கு திருப்பணி, அன்னதான கூடம், வணிக வளாகம் அமைப்பதற்கு சட்டமன்ற கூட்டத்தில் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் உள்ள கரைகண்டீஸ்வரர் மற்றும் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்களுக்கு வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. சிறுவள்ளூர் அருள்மிகு கெங்கை நாராயண பெருமாள் திருக்கோவில் மற்றும் நயம்பாடி அருள்மிகு பூசாத்தம்மன் திருக்கோவில் கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் உள்ள ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புதூர் செங்கம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு புதிய அன்னதான கூடம் அமைக்கப்பட உள்ளது. காம்பட்டு அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவிலுக்கு குளம் திருப்பணி அமைக்கப்படவுள்ளது.

இந்த கோயில்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கோவில் திருப்பணி அன்னதான கூடங்கள் வணிக வளாகம் ஆகியகோவில் திருப்பணிகள் வேண்மென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களிடமும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்களிடமும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, அவர்களிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.

அதன்படி சட்டமன்ற கூட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டில் சட்டமன்ற மானிய கோரிக்கையில் இந்து சமய அறநிலைத்துறை மூலம் கோவில்களில் திருப்பணிகள், குளம் அமைத்தல், அன்னதான கூடங்கள் உள்ளிட்ட திருப்பணிகளை செய்வதற்கு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்களுக்கும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, அவர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அவர்களுக்கும் கலசபாக்கம் தொகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News