கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்து, ஜீப் மோதல்
கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தும் ஜீப்பு மோதிக்கொண்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்;
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், ஜீப்பும் மோதிக்கொண்டதில், அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பௌா்ணமி கிரிவலத்துக்கு வந்துவிட்டு திரும்பிய ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பக்தா்கள் உயிரிழந்தனா். 9 பேர் படுகாயம் அமைந்து திருவண்ணாமலை அரசு மரத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த ரெட்டிகுண்டா கிராமத்தைச் சோ்ந்த சாயிக் நயாக் ரசூல் என்பவரது டாட்டா சுமோ காரில் அதே பகுதியை சேர்ந்த பிரவிளிகா, ஜெகன்மோகன், சுஜாதா, ஆதிநாராயணா, ருசிங்கம்மாள், ஜோதி, வரலட்சுமி, கோபால், நிா்மலா, லலிதா, தவிட்டிநாயுடு ஆகியோருடன் டாட்டா சுமோ காரில் திருவண்ணாமலை பெளா்ணமி கிரிவலத்திற்காக வந்தனர். ஜீப்பை சாயிக் நயாக் ரசூல் ஓட்டினாா்.
திருவண்ணாமலையில் சாமி தரிசனம் முடித்து கொண்டு சனிக்கிழமை பிற்பகல் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி சென்றபோது கலசபாக்கம் அடுத்த குருவிமலை செக் டேம் அருகில் திருவண்ணாமலை - போளூா் சாலையில் சென்றபோது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து மீது ஜீப் மோதியது.
இதில், நிலைதடுமாறிய டாட்டா சுமோ, சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் பிரவிளிகா, ஜெகன்மோகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி இறந்தனார். காயமடைந்த ஜீப் ஓட்டுநா் ரசூல், உள்பட மீதமுள்ள 9 நபர்களும் அங்கிருந்தவா்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
கலசப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.