உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியர் நேரில் ஆய்வு

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”, நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சிறிது நேரம் பாடம் நடத்தி அறிவுத்திறன் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

Update: 2024-06-29 02:40 GMT

மாணவர்களுக்கு சிறிது நேரம் பாடம் நடத்தி அறிவுத்திறன் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கலசபாக்கம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் ஒரு நாள் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் ஒரு நாள் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு தாலுகாவிலும் சென்று மக்களின் அடிபடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து வருகின்றனர். அத்துடன் வளர்ச்சிப் பணிகளையும் மற்ற இதர அடிப்படை வசதிகள் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், வளர்ச்சி பணிகள், கழிவறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சூழல் வசதி, மாணவர்கள் விடுதி, மருத்துவமனை, பொது மக்களுக்கு வழங்கப்படும்

ரேஷன் பொருட்கள், உணவு தானியங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் என அனைத்து துறை சார்ந்த  வளர்ச்சிப் பணிகளையும் துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறார். அப்பொழுது கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்தபோது பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவர் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று பள்ளி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கையை ஏற்று விரைவில் அமைப்பதற்கு உண்டான வசதியை அமைத்துக் கொடுக்கிறோம் என்று தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன் எப்படி உள்ளது என்பதையும் ஆய்வு செய்து அதில் மாணவர்களுக்கு சிறிது நேரம் பாடம் நடத்தி அறிவுத்திறன் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகளை ஆய்வு உணவை நல்ல முறையில் நமது பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுப்பது போல் சமைத்துக் கொடுக்க வேண்டும். முட்டை, கீரை போன்ற சத்தான பொருட்களும் மாணவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பள்ளி வளாகத்தில் மின்சார மின்மாற்றி உள்ளது. உடனடியாக இதை அகற்ற உத்தரவிட்டார். மேலும் மாணவர்கள் கழிவறையை ஆய்வு செய்த ஆட்சியர் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், இந்த பள்ளியில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் மாணவர்கள் தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்புகளையும் உறுதிப்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் பள்ளி அருகில் ஒரு சில கட்டிடங்கள் பழுதாகி உள்ளது. மீதமுள்ள கட்டிடங்களை சுத்தம் செய்து உடனடியாக மாணவர்கள் சுத்தம் செய்த பள்ளியறைக்குள் அமர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற வரும் 100 நாள் பணிகளை ஆய்வு செய்து பணம் சரியான முறையில் வழங்கப்படுகிறதா? பணிகளை நீங்கள் சரியாக செய்து வருகிறீர்களா என்று கேட்டறிந்து 100 நாள் பணிக்கு தேவையான ஊதியங்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டு அறிந்தார்.

மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமையில், சர்க்கரை, போன்ற அனைத்து பொருட்களும் சரியாக கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தார். பின்னர் 53 துறை அதிகர்களுடன் 14 குழுவாக பிரிந்து ஆய்வு செய்து வந்தனர்.

அத்துடன் ரேஷன் கடை அங்கன்வாடி மையம் பள்ளி கட்டிடம் மருத்துவமனை ஊராட்சி அலுவலகம் நூறு நாள் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார், இந்த ஆய்வின்போது அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News