திருவள்ளூர் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பு

Tiruvallur News -திருவள்ளூர் அருகே பள்ளிப்பட்டு பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை சந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2022-09-14 04:30 GMT
திருவள்ளூர் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் திறந்து வைத்தார்.

Tiruvallur News -திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாராஜிபேட்டை, நொச்சிலி ஆகிய கிராமங்களில் தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது .இந் நிகழ்ச்சிகளில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று திறந்துவைத்தார்.

விவசாயிகள் சாகுபடி செய்த நெல் அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறும் வகையில் தமிழக அரசு நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வருவதாகவும், விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டி ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டங்கள் செயல்ப்படுத்தி வருவதாக தெரிவித்தார். 

பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா, ஒன்றிய குழு துணைத் தலைவர் பொன்.சு.பாரதி, ஒன்றிய கவுன்சிலர்கள் நதியா நாகராஜ், முத்து ரெட்டி, ஒன்றிய திமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, கோபி, குருநாதன், அச்சுதன், ஊராட்சி மன்றத் தலைவர் நேதாஜி, விவசாய சங்க தலைவர் வேணுகோபால்ராஜ், சஞ்சிவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News