வீடுகளுக்கே சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை..!

நாலூர் கிராமத்தில் வீடுகளுக்கே சென்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை.

Update: 2021-06-12 15:29 GMT

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கர்ப்பிணித் தாய்மார்களை வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையம் மீஞ்சூர் வட்டார மருத்துவர் ராஜேஷ் ஆலோசனைப்படி வீடு வீடாகச் சென்று கர்ப்பிணித் தாய்மார்களை பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவின் பெயரில் நாலூர் கிராமத்தில் செவிலியர் அன்புமணி கர்ப்பிணி தாய்மார்களுக்கு பி.பி, ரத்தப்பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டார்.

பின்பு சாதன பொருட்களை உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினார். நோய்த்தொற்று பரவாமல் இருக்க கர்ப்பிணி தாய்மார்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News