கோவில்களில் வித்யாரம்பம்; கல்வி பயணத்தை துவங்கிய குழந்தைகள்

Temple Function -திருப்பூரில் விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவில்களில் நடைபெற்றது.

Update: 2022-10-06 02:18 GMT

விஜயதசமி தினமான நேற்று,, கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Temple Function -நவராத்திரி விழாவையொட்டி, திருப்பூர் மாநகரில் உள்ள கோவில்கள், வீடுகளில் கொலு வைத்து தினமும் வழிபாடு நடந்து வந்தது.. நேற்று முன்தினம், கோலாகலமாக ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. நேற்று, விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நாளில் கல்வி, கலைகள் என்று எதை தொடங்கினாலும், வெற்றியாக நடக்கும் என்பதால், குழந்தைகளை முதன்முறையாக பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக்கருவிகள், நடனம் பயிற்சி மேற்கொள்வதற்கும், புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வதற்கும் சிறந்தநாள் இதுவாக உள்ளது.

சரஸ்வதி பூஜை, விஜயதசமி அன்றுதான் வித்யாரம்பம் என்ற கல்வியை துவக்கும் நாளாக உள்ளது. வித்யா என்றால் கல்வி. அந்த கல்வியை சிறப்பாக துவக்கும் நாளை, வித்யாரம்பம் என அழைக்கப்படுகிறது. அதனால் சரஸ்வதி பூஜை படிப்பதற்கு உரிய நாள். அதோடு நாம் ஏதாவது கலையை கற்றுக் கொண்டிருந்தால் அதை கற்றுத் தரும் குருவிற்கு நிச்சயம் மரியாதை செலுத்த வேண்டும். அப்படி குருமார்கள் அருகில் இருந்தால், ஏதாவது பொருள் வாங்கிக் கொடுத்தும், அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வேண்டும். குருவை நாம் மதித்து, மரியாதை செலுத்துவதால் குருவின் அருளுடன் சேர்த்து, தெய்வத்தின் அருளும் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் கோவில்களில் நடப்பது, வழக்கமாக இருந்து வருகிறது. நேற்று திருப்பூர் ஐயப்பன் கோவில், ஈஸ்வரன் கோவில், குருவாயூரப்பன் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை எழுந்து நீராடி சுவாமி தரிசனம் செய்து, தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர். 

குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதி எழுத்தறிவித்தலை தொடங்கி வைத்தனர். அதுபோல் அரிசியிலும் குழந்தைகளின் கை விரல்களை பிடித்து எழுத வைத்தனர். அதன்பிறகு சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். கோவில்களில் நடந்த நிகழ்ச்சியில், திரளான குழந்தைகள் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல், நேற்று திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை (அட்மிஷன்) நடந்தது. ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர்கள், ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். கல்வி கடவுள் சரஸ்வதி பூஜை தினத்தில், கல்விக்கூடங்களில் குழந்தைகளை சேர்ப்பதன் மூலம், சரஸ்வதியின் பூரண அருளை பெறும் வகையில், இந்த நாளில் குழந்தைகள் தங்களது, கல்வி பயணத்தை தொடங்குவது, அவர்களது எதிர்கால வாழ்க்கை, பிரகாசமானதாக அமையும். தங்களது குழந்தைகள், கல்வி பயணத்தை துவங்கிய நிலையில், தட்டில் இருந்த அரிசியில் பிஞ்சு விரல்களில், குழந்தைகள் எழுதியதை பார்த்த பெற்றோர் சிலர், ஆனந்த கண்ணீர் வடித்து, தங்களது நெகிழ்ச்சியை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News