மின் கட்டண உயர்வால் அரிசி விலை உயர்வு: அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

Rice price rise due to power tariff hike: Rice mill owners allege

Update: 2024-04-29 12:36 GMT

திருச்சியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு உயர்த்திய ஐந்து மடங்கு மின் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரியால்தான் அரிசி விலை உயர்ந்துள்ளது என அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி  வணிகர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் மாநில செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக முழுவதிலிருந்து அரிசி ஆலை உறுப்பினர்கள் மற்றும் நெல் மற்றும் அரிசி வணிகர்கள் கலந்து கொண்டு நெல் மற்றும் அரிசி ஆலைகள் அரிசி விற்பனை தொடர்பான தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில செயலாளர் மோகன் கூறியதாவது:-

ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியால் அரிசி விலை உயர்ந்து காணப்படுகிறது. 4 மாநிலங்களில் உள்ள இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய மாநில அரசுகள் அரசுக்கு விதித்துள்ள ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் .மேலும் ஒரு கிலோவாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த மின் கட்டணம் 150 ரூபாயாக உயர்ந்திருப்பது என்பது அரசு விலை உயர்வுக்கு மற்றொரு முக்கிய காரணம்.

பீக்அவர்ஸ் நேரங்களில் அதிக மின்கட்டணம் வசூலிப்பதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் .மேலும் மார்க்கெட்டிங் கமிட்டி இடங்களில் விவசாயிகளிடம் மற்றும் பிற மாநிலத்தில் இருந்து வரும் அரிசிக்கு நேரடியாக பெறும்போது செஸ் பெறுவது ரத்து செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசால் வழங்கப்படும் பாரத் அரிசி ஐந்து ,10 கிலோ வழங்குவது ஏற்புடையதாக இல்லை 26 கிலோவாக வழங்கிட வேண்டும். விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மற்ற பொருட்களைப் போன்று அரிசிக்கு விதிக்கப்பட்ட எம்எஸ்பி அதிகரித்ததால் அரசு விலை உயர்ந்திருந்தாலும் குறைக்க தேவையில்லை அரிசியும் சீரான விலையில் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் என உறுதிப்பட தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வறட்சி ,வெள்ளம் தமிழகத்தில் இருந்தாலும் அரிசி தட்டுப்பாடு இல்லை அண்டை மாநிலங்களிலிருந்து அரிசி தட்டுப்பாடு இல்லாமல் வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டு வருகிறது மேலும் அரசால் இலவச அரிசியில் பாரத் அரிசியும் தடையின்றி கிடக்கிறது என்றும் அவர் கூறினார்.

Tags:    

Similar News