அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை சீரமைக்க அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Communist Requested Fund Allotment அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை சீரமைக்க அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர்

Update: 2024-03-09 03:01 GMT

Communist Requested Fund Allotment

. அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையை சீரமைக்க அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை ஆண்டுக்கு 10 மாதங்கள் இயக்கப்பட்டு, 4.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக் காலமாக பராமரிப்பு இல்லாமல் முழு உற்பத்தி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு சா்க்கரை அரவை மார்ச் 2- ஆவது வாரத்தில் தொடங்க வேண்டும். முன்னதாக டிசம்பா் மாதமே தொடங்கி இருக்க வேண்டிய ஆலைப் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படாததால் நிகழாண்டு ஆலை இயக்கப்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆலை இயக்கத்தின்போது உரிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டதும், விவசாயிகள் பதிவு செய்திருந்த கரும்புகள் காய்ந்து பிழிதிறன் குறைந்தும், மொத்த உற்பத்தியை எடுக்க முடியாமல் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

எனவே, நடப்பு ஆண்டில் இந்த ஆலையை முழுமையாக சீரமைக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக கரும்பு அரவை செய்து இழப்பைத் தவிர்க்க முடியும். அதற்கு பராமரிப்பு நிதி ரூ.80 கோடி வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் வலியுறுத்தினா். எனினும் தமிழக அரசு பராமரிப்பு நிதி வழங்கவில்லை. அத்துடன் நடப்பு ஆண்டில் அரவைக்குப் பதிவு செய்திருந்த 1,500 ஏக்கா் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு வரும் 55 ஆயிரம் டன் கரும்பில், 14 ஆயிரம் டன் கரும்பை மோகனூா் சா்க்கரை ஆலைக்கு அனுப்ப ஒதுக்கீடு செய்துள்ளது.

அரசு அமராவதி வழிவகைக் கடனாக ரூ. 6 கோடியே 75 லட்சம் ஒதுக்கியுள்ளது. இது பராமரிப்புப் பணிகளுக்கு போதாது. ஆகவே, கூட்டுறவு சா்க்கரை ஆலையை சீரமைக்க அரசு ரூ. 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கரும்பு அரவை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News