அவிநாசி : அவிநாசி (தனி) சட்டசபை தொகுதியில் சபாநாயகர் தனபால், ஏழாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி (தனி) சட்டபை தொகுதியில் 1971 - 1977 ல் விவசாய சங்கம், 1977 - 1980ல், காங்., 1980ல், இ.கம்யூ., கட்சி வேட்பாளர்கள் பெற்றனர். 1996ல் தி.மு.க., வெற்றி பெற்றார். 1984, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தலில் கடந்த, 20 ஆண்டுகளாக தக்க வைத்துள்ள அ.தி.மு.க., இம்முறையும், தொகுதியை தக்க வைத்தது. அக்கட்சி சார்பில், போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ., தனபால்,7வது முறையாக அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்றார். இதன் மூலம், அவர் ஏழாவது முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்வாகிறார். இதற்கு முன், கடந்த, 2011ல், ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், 1977, 1980, 1984, 2001 தேர்தலில் சங்ககிரி எம்.எல்.ஏ.,வாகவும், 2016ல், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவிநாசி தொகுதியை பொறுத்தவரை, இதுவரை சட்டசபை தேர்தலில் ஒரே வேட்பாளர் இரண்டாவது முறை போட்டியிட்டால், தோல்வி அடைந்து விடுவர் என்ற 'சென்டிமென்ட்' உள்ளது. இதை, தனபால் உடைத்துள்ளார்.