திருச்சி அருகே லாரி- ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதல்:6பேர் சம்பவ இடத்தில் பலி

trichy near ,dangerous accident news திருச்சி அருகே இன்று அதிகாலை லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

Update: 2023-03-19 05:15 GMT

trichy near ,dangerous accident news

திருச்சி அருகே மரக்கட்டை ஏற்றி வந்த லாரியும் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் ஆம்னிவேனும் நேருக்கு நேர்மோதியதில் சம்பவ இடத்திலேயே 6பேர் பலியாயினர்.

திருச்சியில் இருந்து கரூருக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்துக்கு கோவிலுக்கு செல்வதற்காக ஆம்னிவேனில் குழந்தைகள் உட்பட 9 பேர் சென்றுகொண்டிருந்தனர்.இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த இரு வாகனங்களும் திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அடுத்துள்ள திருவாசிஅருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே ஆம்னி வேனில் பயணம் செய்த 4ஆண்கள் ஒரு பெண் மற்றும் ஒருகுழந்தை உட்பட 6பேர் பலியாயினர்.

trichy near ,dangerous accident news


திருச்சி அருகே  லாரியும் ஆம்னிவேனும் நேருக்கு நேர் மோதியதில் அப்பளம் போல் நொறுங்கிய வேன் (கோப்பு படம்)

trichy near ,dangerous accident news

இதுகுறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரை மீட்டு அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திலேயே பலியான 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.இந்த விபத்தினால் திருச்சி சேலம் ஹைவேஸ் ரோட்டில் 2 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு சரிசெய்தனர்.

trichy near ,dangerous accident news


நேருக்கு நேர் மோதியதால் பலரும்  ஆம்னி வேனில் சிக்கிக் கொண்டனர்.அவர்களை மீட்கும் போலீசார்  (கோப்பு படம்)

trichy near ,dangerous accident news

துாக்க கலக்கமா?

பெரும்பாலான விபத்துகள் அனைத்துமே அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள்ளாகவே நடக்கிறது. தமிழக போலீசார் பல முறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். துாக்கம் வந்தால் வண்டியை எங்கேயாவது ஓரம் நிறுத்தி போதிய ஓய்வெடுத்துவிட்டு செல்லுங்கள். அல்லது அருகிலுள்ள டீக்கடைகளில்நிறுத்தி டீ சாப்பிட்டு கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்ற பின் வாகனங்களை இயக்கலாம் என அறிவுறுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக தமிழகத்தில் போலீசாரே இரவு நேரங்களில் லாரிகளை இயக்கும் டிரைவர்களுக்கு நிறுத்தி டீ வழங்கி அவர்களுக்கு போதிய அறிவுரைகளையும் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்திலும் லாரி டிரைவரோ அல்லது ஆம்னி வேன் ஓட்டிச்சென்றவரோ துாக்க கலக்கத்தில் கவனிக்காததன் காரணமே இந்த நேரடி மோதலாக இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News