திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்
திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் கோர்ட் வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இணைந்து பெண் வழக்கறிஞர்கள் சங்க வளாகத்தில் ரத்ததான முகாம் நடத்தினர். பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலர் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி வரவேற்றார். திருச்சிராப்பள்ளி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஸ்ரீரங்கம் தாலுகா செயலர் பால் குணா லோகநாத் துவக்க உரையாற்றினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில் நீதிமன்ற வளாகத்தில் முதல் முறையாக ரத்ததானம் நடைபெறுவது சிறப்பான நிகழ்வாகும்.இன்றைய காலகட்டத்தில் இரத்த தேவை அதிகம் உள்ளது. வாகன விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கும் ரத்த தேவை அதிகம் உள்ளது இந்த ரத்ததான முகாமினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறிய அளவில் ரத்தம் பூர்த்தி செய்யப்படும் என்றார்.
பொது மருத்துவர் அனிதா பேசுகையில் இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம்.
அறுவை சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்ய முன் வருபவரிடம் இரத்ததானம் பெறப்படுகிறது. இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை என்றார். ரத்த வங்கி ஆய்வக நுட்பனர் மணிமாறன் குருதி வகை, ரத்த அளவு குறித்து ஆய்வு செய்தார். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் மதியழகன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலர் வெங்கட், முன்னிலை வகித்தனர்.
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர் ஹரிஷ் சுந்தர், இரத்த வங்கி ஆலோசகர் பாலச்சந்தர், செவிலியர் மகாலட்சுமி,இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை பொருளாளர் இளங்கோவன், மேலாளர் எழில் ஏழுமலை, செயலாற்று குழு உறுப்பினர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஸ்ரீரங்கம் தாலுகா உறுப்பினர்கள் பிளட் சாம், அய்யாரப்பன், ராஜசேகரன், ராஜன், பாஸ்கர் வழக்கறிஞர்கள் புவனேஸ்வரி சானவாஸ், கோகிலா, சஹானாஸ், சிந்துஜா, ஷீனா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குருதிக்கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.நிறைவாக பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.