திருவாரூர்: 100 % கடைகள் அடைப்பு

திருவாரூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் முழுமையாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது...

Update: 2021-05-06 08:30 GMT

திருவாரூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் முழுமையாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் காலை 6 மணி முதல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகளான டீ கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டது. பெரிய நிறுவனங்களான ஜவுளிக்கடை திறக்க அனுமதி இல்லை என்பதால் அவைகள் பூட்டப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலையிலேயே திறக்கப்பட்டன.

இதனால் மது பிரியர்கள் ஆர்வமுடன் காலை முதலே மதுபான வகைகளை வாங்கிச் சென்றனர். இதில் ஒரு சிலர் அங்கேயே மது அருந்தி விட்டு போதை தலைக்கு ஏறியதும் அங்கேயே கிடக்கின்றனர். திருவாரூர் நகர் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்பதால் பார்சல் மட்டும் வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் 100 சதவீத கடைகள் பூட்டப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News