திருவாரூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-03-05 13:58 GMT

திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்-தஞ்சை சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மேம்பாலத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த நாகை எம்.பி செல்வராஜ் காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர் .தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக வீடுகளை இடிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும், உடனடியாக தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்த பின்னர் வீடுகளை இடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசிய எம்பி செல்வராஜ் பொதுமக்களுக்கு உரிய இடம் வழங்கிய பின்னர் இடத்தை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர் -நாகப்பட்டினம்- தஞ்சை செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டது

Tags:    

Similar News