திருவாரூர் மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவாரூரில் பிப்.27ம் தேதி 870 முகாம்கள் அமைக்கப்பட்டு 1,14,984 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

Update: 2022-02-23 06:31 GMT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.

தமிழக அரசின் தீவிர போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 5 வயதிற்குட்பட்ட சுமார் 1,14,984 குழந்தைகளுக்கு அனைத்து துறை ஒத்துழைப்புடன் போலியோ சொட்டு மருந்து ஒரே தவணையாக வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் ஏற்கனவே எத்தனை முறை சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் தேதி அன்று ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்து பயனடையாலம்.

இத்திட்டத்திற்காக திருவாரூர் மாவட்டம், முழுவதும் கிராமப்புறங்களில் 800 சிறப்பு மையங்களும், நகர்ப்புறங்களில் 70 சிறப்பு மையங்களும் ஆக மொத்தம் 870 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 1,14,984 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகராட்சி மகப்பேறு நிலையங்கள், சத்துணவு கூடங்கள், சமுதாய கூடங்கள், பள்ளிகள், பேருந்துநிலையங்கள் மற்றும் புகைவண்டி நிலையங்கள் ஆகிய இடங்களில் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான இப்பணியில் பொது சுகாதாரத்துறை பணியாளர்களுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், மகளிர் மேம்பாட்டு திட்டப்பணியாளர்கள் மற்றும் பிற துறை பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 3598 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முகாம் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்பெற்று ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கு உரிய போலியோ சொட்டு மருந்துகள் சென்னை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் அவர்கள் மூலம் பெறப்பட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News