திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவாரூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 399 மாணவர்கள் பயன்பெற்றனர்.

Update: 2022-04-25 13:59 GMT

திருவாரூர் ஆர்.சி பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியர் காயத்ரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருவாரூர் ஆர்.சி பாத்திமா உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, காது கேட்கும் கருவி, இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவி ஆகிய மருத்துவ தேவைகள் இந்த மதிப்பீட்டு முகாம் மூலம் நிறைவேற்றபடுகிறது. இன்று நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 399 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News