திருவாரூரில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

திருவாரூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன 35 கிலோ மீன்கள் பறிமுதல்.

Update: 2021-10-26 06:07 GMT

விளமல், வாளவாய்க்கால் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் நகரின் பல பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்ததையடுத்து திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட விளமல், வாளவாய்க்கால் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், மீன்வளத்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News