நெல் விற்பனைக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

திருவாரூர் மாவட்டத்தில், தழிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய, இணையதளத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-01-23 01:30 GMT

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டத்தில்,  நடப்பு காரீப் 2021-2022 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கு,  மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில்  நெல் விற்பனை செய்ய ஏதுவாக பயன்பாட்டில் உள்ள இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு, விவசாயி பெயர் ஆதார் எண், புல எண் மற்றும் தங்கள் பகுதிக்குட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது https://www.tncsc-edpc.in/Account/Login இணையதளத்தில் பதிவேற்றம் செய்து,  கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். அதன் அடிப்படையில்,  நீண்ட நேரம் காத்திருக்காமல்,  குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில்  விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யலாம். 

இணைய வழிப்பதிவு தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால்,  கணினி தொழில்நுட்ப அலுவலர்கள்  அன்பரசு - 9791714722 மற்றும்  வெங்கடேஷ்- 8667709588 ஆகியோரை  தொடர்பு கொள்ளலாம்.  இணைய வழிப்பதிவினை, தங்கள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் மேற்கொள்ளலாம் என்று, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News