தெரு நாய் கடித்தால் யாருக்கு தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி

Dog Bite Treatment in Tamil -தெரு நாய் கடித்தால் அதற்கு சோறு போட்டு வளர்ப்பவர்களே பொறுப்பு என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2022-09-13 05:19 GMT

பைல் படம்.

Dog Bite Treatment in Tamil -கேரளா மாநிலம் அரை கிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது, திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று, சிறுவனை கடித்து குதறியது. சி

றுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெரு நாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிறுவனை கடித்த நாய் அதே நாளில் அப்பகுதியை சேர்ந்த மேலும் 3 பேரை கடித்ததாக கூறப்படும் நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் தகவல் படி 2022ல் இதுவரை கேரளாவில் 21 பேர் வெறிநாய்க்கடியால் இறந்துள்ளனர். அவர்களில், பாதிக்கப்பட்ட ஐந்து பேர், அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி ரேபிஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர்.

கேரளாவில் வெறிநாய்கடிக்கு எதிரான தடுப்பூசிகள் பயனற்றதாக மாறி வருகிறது. இது குறித்து சமீபகாலமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதை தொடர்ந்து மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ், மாநிலத்தில் கிடைக்கும் ரேபிஸ் தடுப்பூசியின் தரத்தை பரிசோதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கேட்டுக் கொண்டார்.

கேரளா முழுவதும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதுகுறித்த உடனடி செயல் திட்டத்தை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேச உள்ளதாக உள்ளாட்சித் துறை மந்திரி எம்.பி.ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

மேலும் மாநிலத்தில் 152 தொகுதிகளில் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) மையங்கள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எம்.பி.ராஜேஷ் தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் தெருநாய்களுக்குத் தொடர்ந்து உணவளிக்கும் நபர்களே தடுப்பூசி போடுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அந்த விலங்குகள் மக்களைத் தாக்கினால் அதற்கான செலவையும் ஏற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு பரிந்துரைத்துள்ளது.

மக்களின் பாதுகாப்புக்கும் விலங்குகளின் உரிமைகளுக்கும் இடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.5 கோடி நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் (27,52,218), அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (20,70,921), மராட்டியம் (15,75,606) மற்றும் மேற்கு வங்காளத்தில் (12) ,09,232). மறுபுறம், லட்சத்தீவில் இதே காலகட்டத்தில் நாய் கடி வழக்குகளே இல்லை இது 2020 இல் 46,33,493 ஆகவும், ஒரு வருடம் கழித்து 17,01,133 ஆகவும் குறைந்துள்ளது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 14.5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தமிழ்நாட்டில் (251,510) மற்றும் மராட்டியத்தில் (231,531) பதிவாகியுள்ளன. இந்தியாவும் ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் மேற்பட்ட ரேபிஸ் வழக்குகள் மற்றும் இறப்புகளைப் பதிவு செய்கிறது. இருப்பினும், செல்லப்பிராணிகளை விட தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகம். 2019 கணக்கின்படி, இந்தியாவில் 1,53,09,355 தெருநாய்கள் உள்ளன. இது 2012 இல் 1,71,38,349 ஆகக் குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம் (20,59,261), ஒடிசா (17,34,399) மற்றும் மரட்டியத்தில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்கள் காணப்படுகின்றன. லட்சத்தீவு மற்றும் தாத்ரா நகர் ஹவேலி ஆகிய இடங்களில் தெருநாய்கள் இல்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News