வைகை அணையில் தண்ணீர் திறப்பு: ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

ஐந்து மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.

Update: 2022-06-02 14:35 GMT

தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக பாசன சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மாநில அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்துவிட்டனர்.

வைகை மற்றும் முல்லைப்பெரியாறு அணை திறந்துவிடப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். இன்று முதல் 45 நாட்களுக்கு தொள்ளாயிரம் கனஅடி வீதமும், அதனைத்தொடர்ந்து 75 நாட்களுக்கு முறை பாசனம் அடிப்படையில் 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News