போடி மெட்டு மலைப்பாதையில் போக்குவரத்து மீண்டும் சீரானது

போடி மெட்டு மலைப்பாதையில் மண், பாறை சரிவுகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மூணாறுக்கு போக்குவரத்து தொடங்கியது.

Update: 2021-11-25 07:37 GMT

போடி மெட்டு மலைப்பாதை சீரமைக்கப்பட்டு மீண்டும் போடி- மூணாறு இடையே போக்குவரத்து  தொடங்கியது.

போடி மெட்டு மலைப்பகுதியில் ஏற்பட்ட மண், பாறை சரிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து மீண்டும் சீரானது.

போடி மெட்டு, முந்தல், குரங்கனி, புலியூத்து அருவி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் போடி மெட்டு மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவுகள், பாறைகள் சரிவும் ஏற்பட்டு போடி- மூணாறு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சரிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் இரவு, பகலாக நடந்தன. இன்று காலை முற்றிலும் அகற்றப்பட்டு போடி- மூணாறு இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கேரள வாகனங்கள் தமிழகத்திற்கும், தமிழக வாகனங்கள் கேரளத்திற்கும் சென்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்..

Tags:    

Similar News