தேனியில் 7 ரூபாய் தேங்காயை 70 ரூபாய்க்கு நுட்பமாக விற்கும் விவசாயிகள்

Coconut Flower - தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் தேனி விவசாயிகள் அதனை அதனை நுட்பமாக ரூ. 70 க்கு விற்பனை செய்கிறார்கள்.

Update: 2022-07-06 08:19 GMT

தேனி குமுளி ரோட்டோரம் போடி விலக்கினையொட்டி தேங்காய ்பூ விற்கும் விவசாயி.

Coconut Flower - பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தென்னையில் இளநீர், தேங்காய், குருத்து, தென்னை ஓலை, தென்னை வறுச்சி, தென்னைக்குலை, சோகை என அத்தனையும் பயன்படுகிறது. தென்னை மரத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தென்னையை பொறுத்தவரை குறைந்த பராமரிப்பு செலவு நிறைந்த வருவாய் என்ற நிலை தான் இருந்தது.

கொரோனா காலத்திற்கு முன்பு வரை ஒரு தேங்காய் விலை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டதும் உண்டு. கொரோனா கால மாற்றம் எல்லா விவசாயிகளைப்போல் தென்னை விவசாயிகளையும் வீழ்த்தி விட்டது. தற்போது நல்ல தரமான ஒரு தேங்காய் 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை பார்த்த விவசாயிகள் வழக்கம் போல் புலம்பாமல் மாற்றி யோசிக்க தொடங்கி விட்டனர்.

தேங்காயினை கன்று வளரும் வரை விளைவிக்கின்றனர். ஒரு அடி உயரம் வரை கன்று வளர்ந்த தேங்காயினை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்கின்றனர். அந்த தேங்காயினை உடைத்தால் உள்ளே தேங்காய் பூ போல் உள்ளது. சாப்பிட நுங்கு போன்று காணப்படுகிறது. இதனை ஒன்று 70 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கின்றனர். மருத்துவத்தன்மை வாய்ந்தது என்ற ஒரு தாரக மந்திரத்தை மட்டும் சொல்லி விற்கின்றனர். இது நுங்கும், தென்னை குருத்தும் கலந்து சாப்பிட்டது போன்றே சுவையுடன், குளிர்ச்சியுடன் இருக்கும்.

இதனை மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் மூலம் ஏழு ரூபாய்க்கு விற்க வேண்டிய தேங்காயினை 70 ரூபாய்க்கு விற்கின்றனர். பல இடங்களில் 100 ரூபாய், 120 ரூபாய் எனவும் விற்கின்றனர். லாபம் மட்டும் 15 மடங்கிற்கு மேல் உள்ளது. இந்த வியாபார நுணுக்கம் சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

தேங்காய் பூ எடுத்த பின்னர், உள்ளே இருக்கும் தேங்காய் பருப்பினை காய வைத்து எண்ணெய் ஆட்டி அதிலும் ஒரு லாபம் பார்த்து விடுகின்றனர். விவசாயிகளின் இந்த நுட்பமான சிந்தனை அவர்களுக்கு நல்ல வருவாய் பெற்றுத்தருகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News