20% இட ஒதுக்கீடு - பாமகவினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி மாநில துணை பொதுச்செயலாளர் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-01-29 18:05 GMT

 தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமகவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று  அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முனட தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனியில் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக நின்ற பாமகவினர், வன்னியர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.‌ இதையடுத்து  தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்‌.

Similar News