தஞ்சாவூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்குப்பின் மின்சார வசதி பெற்ற கிராம மக்கள்

Villagers in Thanjavur district get electricity after 50 years

Update: 2022-06-24 11:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்குடாபகுதியில் வசிக்கும் 12 குடியிருப்புகளுக்கு இலவசமின் இணைப்புபகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், கழுமங்குடாபகுதியில் வசிக்கும் 12 குடியிருப்புகளுக்கு இலவசமின் இணைப்புபகளை மாவட்ட ஆட்சித் தலைவர்  வழங்கினார்.

பின்னர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மரக்காவலசை ஊராட்சியில் கமுமங்குடா கிராமத்தில் ஏராளமானமீனவர் குடும்பங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு  மேல் வசித்துவருகின்றனர். இக் குடும்பங்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்புப் பெற முடியாத நிலையில் இருந்தனர். இத்தகவல் உரிய அலுவலர்கள் மூலம் எனக்கு கிடைத்தது. , அதனடிப்படையில் கமுமங்குடா கிராமத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்து,மின் இணைப்பு வழங்க மின் கம்பங்கள் நட்டு 12 குடும்பங்களுக்கு இன்று இலவசமின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகவே மின் இணைப்பு இல்லாமல் பிள்ளைகள் படிக்க முடியாமல் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தனர். இந்தநிலையில் மாவட்டஆட்சித் தலைவரின் சீரிய முயற்சியினால் எங்கள் இல்லங்களுக்கு  ஒளி கிடைத்துள்ளதாக கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்), என்.ஓ. சுகபுத்ரா, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர்  பிரபாகரன், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுதலைவர்  கி. முத்துமாணிக்கம், வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News