தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டிடங்கள்: சுகாதாரத்துறை அமைச்சர் திறப்பு

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டு. பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்

Update: 2023-07-30 07:15 GMT

 தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு ஊராட்சியில் ரூபாய் 1.57 கோடிசெலவில் புதியகட்டிடங்கள் இன்று திறந்து வைத்து கர்ப்பிணிக்கு மருந்து பெட்டகம் வழங்குகிறார், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருந்துதுறைசார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் , மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  தலைமையில் இன்று (30.07.2023)பல்வேறு புதிய கட்டிடங்கள் திறந்துவைத்தார்.

பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு ஊராட்சியில் ரூபாய் 1.57 கோடிசெலவில் புதியகட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டது. இதில் தொண்டராம்பட்டு ஆரம்பசுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதாரஆய்வகம் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டி லும், ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சித்தாபிரிவுகட்டிடம் ரூபாய் 23.30 இலட்சம் மதிப்பீட்டிலும், வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஹோமியோபதி பிரிவு கட்டிடம் ரூபாய் 23.30 இலட்சம் மதிப்பீட்டிலும்,

தெக்கூர் புதியதுணைசுகாதாரநிலையகட்டிடம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டிலும்,மட்டும் ரவுசாபட்டி புதியதுணை சுகாதாரநிலைய கட்டிடம் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டிலும் இன்று தொண்டாரம்பட்டு ஆரம்பசுகாதார நிலையத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பட்டுக்கோட்டை வட்டம், ஆலடிக்குமளையில் புதியதுணை சுகாதார நிலைய கட்டிடம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனை வளாகத்தில் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் ரூபாய் 70 இலட்சம் மதிப்பீட்டில் நோயாளிகளுடன் உடனிருப்போர் தங்குமிடம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் பட்டுள்ளது. தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாளை முதல் 108 ஆம்புலன்ஸ் (மருத்துவ அவசர ஊர்தி) சேவை தொடங்கப்படும்.  விரைவில் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்துபணிகளும் நிரப்பப்பட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என்றும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர்  திடீர் ஆய்வு மேற்கொண்டு. பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டுஅறிந்தார்

இந்நிகழ்ச்சியில் சட்டமன்றஉறுப்பினர்கள்  துரை.சந்திரசேகரன் (திருவையாறு),.காஅண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மருத்துவபணிகள் இணை இயக்குனர்  திலகம்,தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைமுதல்வர்  ஆர் பாலாஜி நாதன்,துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.பா.கலைவாணி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒரத்தநாடு ஒன்றியகுழுத் தலைவர் சி .பார்வதிசிவசங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், ஏனாதி பா.பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகராட்சி நகரமன்ற தலைவர் செ. சண்முகப்பிரியாசெந்தில்குமார், துணைமேயர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News