தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

தஞ்சை மாவட்டத்தில் 1,328 இடங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

Update: 2021-09-12 03:15 GMT

தஞ்சையில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம்,பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட எட்டு தாலுக்காக்களில் 1,328 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் கரந்தை மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளும்படியும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News