தனியார் கரும்பு ஆலை நிர்வாகத்துடன் ஆட்சியர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம்

Sugar Mills News -விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

Update: 2022-10-08 07:30 GMT

தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற தனியார்  சர்க்கரை ஆலை குறித்த விவசாயிகளுடனான முத்தரப்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

Sugar Mills News -தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய புதிய நிர்வாகம், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள்,கரும்பு விவசாயிகள் உள்ளிட்ட முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திருமண்டங்குடிதிருஆரூரான் சர்க்கரைஆலையை வாங்கிய புதியநிர்வாகம்,கடன் வழங்கிய வங்கிஅதிகாரிகள்,கரும்புவிவசாயிகள் உள்ளிட்ட முத்தரப்பு கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்  மாவட்டஆட்சித் தலைவர் பேசியதாவது:  திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரைஆலைகடந்த 10 ஆண்டுகளாக தன்னுடைய திறனற்ற நிர்வாக செயல்பாடுகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2016-2018ம் ஆண்டுகள் வரை விவசாயிகள் வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகை, 2014-2018ம் ஆண்டுகளில் கரும்புக்கான மத்திய,மாநில அரசுகள் வழங்கிய ஊக்கத் தொகையை வட்டியுடன் புதியநிர்வாகம் வழங்க வேண்டும்.விவசாயிகள் பெயரில் வங்கிகளில் மோசடியாக வாங்கிய பலகோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடிசெய்ய வேண்டும்.

விவசாயிகளுக் குவங்கிகளில் கடன் இல்லா சான்றிதழ்கள் வழங்க வேண்டும். கடன் பெறாமலேயே விவசாயிகளின் பெயரில் உள்ள சிவில் ஸ்கோர் இருப்பதை ரத்து செய்ய வேண்டும் .கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரேதவணையில் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய கரும்புக்கான தொகை அனைத்தையும் வழங்கிய பின்னர் புதியநிர்வாகம் ஆலையில் பராமரிப்பு பணியைதொடங்க வேண்டும், இனிஆலைநிர்வாகம் கரும்பு அரவை செய்தால் 15  நாள்களில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பதை கரும்பு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை  எடுத்து வைத்தனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் இந் தசர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை நீதிமன்றம் உத்தரவுப்படி நான்கு தவணைகளாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 7,452 விவசாயிகளுக் குநிலுவைத் தொகை வழங்க வேண்டியதில் இதுவரை 2,465 விவசாயிகளுக் குமுதல் தவணை வழங்கப்பட்டு விட்டது. இரண்டாவது தவணை தீபாவளிபண்டிகைக்குள் வழங்கப்படும். 2014 -2018ம் ஆண்டுகளில் ஊக்கத்தொகை 5,047 விவசாயிகளில் 2,170 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள விவசாயிகளுக் குவழங்கப்படும். அதேபோல் கரும்புவெட்டியதற்கான வெட்டுக் கூலி,போக்குவரத்து வாடகைபாக்கி, கரும்புக்கான நிலுவைத் தொகை ஆகியவை முழுமையாக வழங்கப்படும்.

இந்தஆலைகடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததால், இயந்திரங்கள் பழுதாகிவிட்டது. மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரசுமார் ரூ.650 கோடிவரை செலவாகும். அந்ததொகையை வங்கியில் கடன் பெற்றுதான் தொடங்க முடியும். அதுவரை விவசாயிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இங்குமீ ண்டும் ஆண்டொன்றுக்கு 8 லட்சம் டன் கரும்பு அரவைசெய்யும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கும். அடுத்தாண்டு நவம்பர் மாதம் கரும்பு அரவை தொடங்க உள்ளது. எனவே விவசாயிகள் கரும்புபரியிட முன் வரவேண்டும். விவசாயிகளின் பெயரில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை தொடர்பாக வங்கிஅதிகாரிகளுடன் பேசி சுமூகதீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சக்கரை ஆலை நிர்வாகம்  சார்பாக தெரிவித்துள்ளனர்

எனவே  இக்கூட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான கரும்புக்கான நிலுவைத்தொகை வழங்கமுன் வந்த நிர்வாகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வங்கிக் கடன் தொடர்பாக தீர்வுகாண விவசாயிகள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்துஅதில் 7 பேர் கொண்ட விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைக்க வேண்டும். விவசாயிகளுக்குகடன் வழங்கிய வங்கியினர் இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு எந்தஒரு நோட்டீசும் வழங்கப்படமாட்டாது  என்றும்  மாவட்டஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் வருவாய் மரு. என்.ஓ.சுகபுத்திரா , மாவட்டவேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின்,கால்ஸ் டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் முனுசாமி, தலைமைநிதிஅலுவலர் மணிகண்டன், கரும்புஉற்பத்தி ஆலோசகர் கந்தசாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News