தஞ்சை மாவட்ட காட்டுநாயக்கர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று அளிப்பு

விக்ரமம் ஊராட்சியில் வசிக்கும் வசிக்கும் 52 குடும்பங்களுக்கு பழங்குடியினர் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

Update: 2022-12-08 13:30 GMT

விக்ரமம் ஊராட்சியில் வசிக்கும் வசிக்கும் 52 குடும்பங்களுக்கு பழங்குடியினர் இன வகுப்பு சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மௌலானாதோப்பு  காட்டுநாயக்கன் குடியிருப்பு பகுதிகள் வசிக்கும் விளிம்பு நிலைமக்களுக்கு பழங்குடியினர் இன வகுப்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்   (08.12.2022) வழங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்  தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர்  விளிம்பு நிலை மக்களுக்காக அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் விளிம்பு நிலை மக்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு  வருகிறது. அதன்படி  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே ஆதியன் இன மக்களுக்கும் இருளர் இன மக்களுக்கும் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பட்டுக்கோட்டை வட்டம் மௌலானாதோப்பு காட்டுநாயக்கன் குடியிருப்பு பகுதி மற்றும் மதுக்கூர் ஒன்றியம் விக்ரமம் ஊராட்சியில் வசிக்கும் வசிக்கும் 52 குடும்பங்களுக்கு 104 விளிம்பு நிலை மக்களுக்கு பழங்குடியினர் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பழங்குடி இன சாதி சான்றிதழ் வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தமிழகஅரசு இவர்களுக்கு பழங்குடி இன மக்களுக்கான சாதி சான்றிதழ்கள் வழங்கி வருகின்றது. இதன் மூலம் இவர்களின் பொருளாதார மேம்பாடு அடைய வழி வகுக்கும்,மேலும், இப்பகுதி மக்கள் பட்டாக் கோரி விண்ணப்பம் மனுக்கள் வழங்கியுள்ளது. தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்டஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தெரிவித்தார்.

மேலும், மாவட்டஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 29 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டையும், 28 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்  பிரபாகரன், வட்டாட்சியர்  ராமச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் அமுதாதுரைசெந்தில், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செ. இலக்கியா மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக, கேரள மலைப்பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டு, கோடாங்கிகளாக, வேட்டையாடுபவர்களாக, குறி சொல்லிப் பிழைப்பவர்களாக உள்ள மிகச் சிறிய சமுதாயம் காட்டு நாயக்கர் சமுதாயமாகும். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் தளிஞ்சி, உடுமலை, வால்பாறை, டாப்சிலிப் போன்ற பல பகுதிகளில் இருந்து, ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னர் பிழைப்புக்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு குறி சொல்லும் கோடாங்கிகளாக வந்து இங்கேயே தங்கி வாழ்ந்து வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் வீரபாண்டி, குப்பாண்டம்பாளையம், நெருப்பெரிச்சல், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கு மேற்பட்ட காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர்.அரசு ஆணைப்படி பழங்குடியின (எஸ்.டி.) பட்டியலில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாயத்தினர், தற்போது சமதாயத்தில் தாங்களும் உயர, தங்களது குழந்தைகளைப் படிக்க வைத்து வருகிறார்கள். ஆனால், இச்சமுதாயத்தினர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கவும், வேலைவாய்ப்புப் பெறவும் சாதிச் சான்று தேவைப்படுகிறது.

இவர்களுக்கு சாதிச் சான்றில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள இந்து காட்டுநாயக்கர் என்ற சாதிப் பெயருடன் சான்று வழங்கினால் மட்டுமே அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.சமீபகாலங்களில் 2003-இல் திருப்பூர் வட்டாட்சியர் இந்து காட்டு நாயக்கர் என்று சான்று வழங்கி பழங்குடியினருக்கான பட்டியலில் உறுதி செய்து சான்றளித்துள்ளார். அதன் பிறகு கடந்த பத்தாண்டுகளில் வந்த 4 வட்டாட்சியர்கள், தொடர்ந்து காட்டுநாயக்கர் என்று சாதிச் சான்று தர மறுத்து, பல்வேறு பெயர்களில் சாதிச் சான்று வழங்கியுள்ளார்கள்.

இதனால் பழங்குடி சமுதாயமான இந்து காட்டு நாயக்கர் சமுதாயம் தனக்கான எந்தச் சலுகையையும் பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வட்டாட்சியர் மாறும் போதும் புதிது புதிதாக விதிகளைச் சொல்லி அச்சமுதாய மக்களை அலைக்கழிக்கிறார்கள்.இதுகுறித்த 29.4.2013 தேதியிட்ட தமிழக அரசு செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிய அரசாணை ஒன்றில், பழங்குடியினருக்கு சரியான சான்று வழங்குமாறு தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் காட்டு நாயக்கர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News