பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-04-22 02:30 GMT

கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது, இந்நிலையில் 2-வது நாளான இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திடீரென ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர், இரவு பத்து மணிக்கு பிறகு வெளியில் வந்த நபர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், இரவு ஊரடங்கின் போது வெளியில் வரும் நபர்கள் இரண்டு நாட்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு வரும் நாட்களில் இரவு நேரத்தில் வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமைகளில் அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூட கூடாது எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

Tags:    

Similar News