ஜூன்-12 ல் தண்ணீர் திறப்பு, விவசாயிகள் வரவேற்பு, பயம் கலந்த மகிழ்ச்சியென தெரிவிப்பு

ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதை வரவேற்பதாகவும், ஆனால் இந்த அறிவிப்பு பயம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்டா விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2021-06-03 08:45 GMT

ஜூன் -12  மேட்டூர் அணையில் நீர் திறப்பு என்று அரசு அறிவித்துள்ளது.இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பு என்பது பயம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் விவசாயிகள், குறுவை சாகுபடியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் நிபந்தனைகளின்றி அனைத்து வங்கிகளிலும் விவசாய கடன் வழங்க வேண்டும் .

மேலும் கொரோனா காலத்தில் சிறு குறு விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கால தாமதம் ஏற்படுத்தாமல் கடன் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு, விதைநெல் தட்டுப்பாடுகள் அதிக அளவில் இருப்பதாகவும், எனவே உடனடியாக அதைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதனை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் அப்போதுதான் கடைமடை வரை தண்ணீர் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News