தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கண்காட்சி விற்பனை அரங்கம்: ஆட்சியர் திறப்பு

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காட்சிமற்றும் விற்பனை அரங்கினை மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்

Update: 2022-06-09 05:30 GMT

தஞ்சை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள  தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை காட்சி மற்றும் விற்பனை அரங்கை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காட்சி மற்றும் விற்பனை அரங்கம்: மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காட்சி மற்றும் விற்பனை அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து பார்வையிட்டு பேசியதாவது:

புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்திய இரயில்வே அமைச்சகம் முக்கிய இரயில் நிலையங்களில் "ஒரு இரயில் நிலையம் - ஒருஉற்பத்திபொருள்"என்றதலைப்பின்கீழ் கடைகள் அமைத்திட அனுமதி வழங்கியுள்ளது.

அதனைதொடர்ந்து  தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள  தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் விற்பனை செய்வதற்காக தஞ்சாவூர் இரயில் நிலையத்தில்  மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தின் சார்பில் விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த விற்பனை அரங்கில் தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுஉறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நடமாடும் பொம்மைகள், பொய்கால் குதிரைகள் உள்ளிட்ட பலவகையான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

இந்நிகழ்ச்சியில்,மகளிர் திட்ட இயக்குநர்  லோகேஸ்வரி, உதவிவணிகமேலாளர் (தென்னகரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம்) சந்திரசேகர், தஞ்சாவூர் ரயில் நிலையமேலாளர்  சம்பத்குமார், உதவிதிட்டஅலுவலர்கள் மோகன், சாமிநாதன்,  சிவா, சரவணபாண்டியன், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News