தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை

தஞ்சை மாவட்டத்தில் 29,903 பயனாளிகளுக்கு (93%) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது

Update: 2023-12-05 07:30 GMT

 தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றி தெரிவிக்கும் மாற்றுத்திறனாளி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மொத்தம்31169நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது .அதில்29903பயனாளிகளுக்கு (93சதவீதம்) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

7163பயனாளிகளுக்கு  ,மனவளாச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையும், கடுமையாக கை ,கால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ்962பயனாளிகள் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட182நபர்களுக்கும்,298தொழு நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கான பராமரிப்பு உதவித் தொகையும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ்70நபர்களும் பயனடைந்து வருகின்றனர்.

மேற்குறிப்பிட்ட பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மொத்தம்8675நபர்களுக்கு மாதம்2000ரூபாய் வீதம்12மாதத்திற்கு  208,200,000(ருபாய்இருபது கோடி எண்பத்தி இரண்டு இலட்சம்) பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நுஊளு வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு காதுகேளாதோருக்கான மேல்நிலைபள்ளியும் அரசுபார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியும் இயங்கி வருகிறது.மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம்09மன வளர்ச்சி குன்றிய குழங்தை களுக்கான சிறப்புப் பள்ளிகளுக்கு உணவூட்டு மானியமாக67,20,158-(அறுபத்தி ஏழு இலட்சத்தி இருபதாயிரத்து நூற்றி ஐம்பத்தி எட்டும ட்டும்) மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய மானியமாக 27நபர்களுக்கு ரூ.90,72,000(தொண்ணூறு இலட்சத்தி எழுபத்தி இரண்டாயிரம் மட்டும்)2காது கேளாதோருக்கான சிறப்புப்பள்ளிகளும், கைகால்பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக 02அரசு உதவிபெறும்பள்ளிகளும்சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

குழந்தைகளின் குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பயிற்சி மேற் கொள்ள ஏதுவாக காது கேளாத மனவளர்ச்சி குன்றிய ,ஆட்டிசம்  பாதித்த குழந்தைகளுக்கு ஆரம்பநிலைபயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. வருடந் தோறும்ரூ.33,14,000மதிப்பில் சிறப்பாசிரியர்களுக்கு ஊதியமானியம் வழங்கப்பட்டு வருகிறது. மனநலம்பாதிக்கப் பட்டோரை பாதுகாக்கும் இல்லங்களுக்கு ரூ.2429600- (இருபத்திநான்கு இலட்சத்தி இருபத்தி ஒன்பதாயிரத்து அறநூறு மட்டும்) மதிப்பில் வழங்கப்பட்டுவருகிறது. தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பகல்நேர பராமரிப்பு மையங்களுக்குரூ.24,96,500மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் முலம்இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்-மோட்டார் பொருத்திய தையல்இயந்திரம்  ,மூன்றுசக்க ரசைக்கிள், சக்கரநாற்காலி, காதுக்குபின்அணியும் காதொலிகருவி, பார்வையற்றவர்களுக்கான நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லிகை கடிகாரம், பார்வை குறையுடையவர்களுக்கான எழுத்துக்களை பெரிதாக்கி படிப்பதற்கான உருப்பெறுக்கி, நவீனசெயற்கை அவயம், ஊன்றுகோல், மோட்டார் பொருத்தப்பட்ட சக்கரநாற்காலி,காதுகேளாத வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் ம ற்றும் பார்வையற்றோருக்கு திறன்பேசி, போன்று2020-2021ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை1992மாற்றுத்                                                                                                                                                                                                                                                                   திறனாளிகளுக்குரூ3,51,60,820(ரூபாய்மூன்றுகோடியேஐம்பத்தொருஇலட்சத்துஅறுபதாயிரத்துஎண்ணூற்றுஇருபது)மதிப்பிலானஉதவிஉபகரணங்கள்வழங்கப்பட்டுள்ளன.

வங்கிகடன்மான்யதிட்டம்மானியதொகையாக25,000- மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்,வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கல்விஉதவித்தொகை திட்டம்வாசிப்பாள் உதவித்தொகைதிட்டம், தெருமுனை  பிரசாரம்,போன்றதிட்டங்களுக்கு ரூ.88,45,800(ரூபாய்எண்பத்தெட்டு இலட்சத்து நாற்பத்தாயிரத்து எண்ணூறு) மதிப்பிலான திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

5வகையான திருமண உதவித்தொகை திட்டங்கள்16,50,000- மதிப்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகள் உரிமைத் திட்டம் பாவள திட்டம் தஞ்சாவூர் மாவட்த்தில் 2023-2024 ஆம் நிதியாண்டில் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கிடவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள்) அமைக்கப்பட உள்ளது.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வடக்கு உமையாள்புரம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற மாற்றுத்திறனாளி  தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றிகளை தெரிவித்துள்ளார் என மாவட்ட ஆட்சித் தலைவர்  தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்;.

Tags:    

Similar News