தஞ்சை மாவட்டத்தில் 117 மையங்களில் தடுப்பூசி இல்லை, பொதுமக்கள் ஏமாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் இன்று 117 மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை என கூறப்படுகிறது. ஆர்வமாக தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2021-05-31 07:15 GMT

தஞ்சை மாவட்டத்தில் 117 மையங்களில் தடுப்பூசி போட்டப்பட்டு வந்தது.. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்ட வந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மையங்களிலும் கோவிஷுல்டு மற்றும் கோவாக்சீன் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை எனவும்,

எனவே பொதுமக்கள் யாரும் தடுப்பூசி போட வர வேண்டாம் எனவும் தடுப்பூசிகள் நாளை வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என அனைத்து மையங்களிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதனால்தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் தடுப்பூசி போடுவதற்கு பல்வேறு தடைகளைத் தாண்டி வந்ததால், இங்கு ஊசி இல்லை என்பாதல் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்வதாகவும் எனவே தடுப்பூசிகளை போதிய அளவில் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News