தஞ்சை மாவட்ட காவலர்களுக்கு பயிற்சி முகாம்

தஞ்சை மாவட்ட காவலர்களுக்கு பணியின் போது சிறு உடற்பயிற்சி செய்வது எப்படி என்கிற பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2021-06-12 08:15 GMT

தஞ்சாவூரில் போலீசாருக்கு  நடைபெற்ற பயிற்சி முகாம்

கொரோனா காலத்தில் பணிபுரியும் காவலர்கள், பணியில் இருக்கும் போதே உடலை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஒரு நாள் பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா காலம் என்பதால் வெளியே வேலை செய்யும் காவலர்கள் வேலை பார்க்கும் போதே உடற்பயிற்சியை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து 250 ஆயுதப்படை காவலர்களுக்கு, பிசியோதெரபி டாக்டர் முருக பிரபு காவலர்களுக்கு பயிற்சி  வழங்கினார்.

இதில் மூச்சு பிரச்சனை எப்படி எதிர் கொள்வது, அதிகம் நேரம் நிற்க்கும் போது கால் வலியை, உடற்பயிற்சி மூலம் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

தஉடலை சீராக வைத்து கொள்வது எப்படி, உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது எப்படி என குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தொடங்கி வைத்தார். 

Tags:    

Similar News