ஜூலை 1 ல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்: ஆட்சியர் தகவல்

Tanjore District Farmers Grievance Meeting on July 1

Update: 2022-06-24 07:30 GMT

தஞ்சாவூர்  மாவட்டத்தில் 2022  ஜூன் மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.06.2022 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  ஜமாபந்தி நடைபெறுவதால் நிருவாக காரணங்களை முன்னிட்டு 24.06.2022க்கு பதிலாக 01.07.2022 வெள்ளிக்கிர்மை தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்த்தளத்தில் உள்ள  பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள்  கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய  தொழில் நுட்பங்கள்  குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும்   வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை,  வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் தங்கள்  பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும்  கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின்னர் மனுக்களை அளிக்கலாம்.

எனவே  விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம்  சார்ந்த கருத்துகளை கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம். கொரோனா தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News