தஞ்சாவூரில் அரசுபோக்குவரத்துக்கழகம் மூலம் 3 வழித்தடங்களில் புதிய பஸ் தொடக்கம்

இந்த புதிய வழித்தடங்கள் மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக செல்வதற்கு இந்த பஸ்கள் உறுதுணையாக இருக்கும்

Update: 2022-11-06 14:30 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் 3 போக்குவரத்து வழித்தடங்களைபள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் 3 போக்குவரத்து வழித்தடங்களைபள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம்,கல்லணையில் தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் 3 போக்குவரத்துவழித் தடங்களைமாண்புமிகுபள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமையில் இன்று (06.11.2022) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுக் கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழ்நாடுஅரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் கல்லணையில் இருந்து 3 புதிய போக்குவரத்து வழி தடங்களுக்கான பேருந்துகள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.திருக்காட்டுப்பள்ளிபகுதியில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான கல்லணை கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்ட பாலம் தேவையென்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ரூ. 90 கோடியில் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தில் பொது போக்குவரத்திற்காக பேருந்து இயக்கம் இல்லாமல் இருந்தது .

பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் தடம் எண்: 88எல் திருக்காட்டுப்பள்ளி -திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரை பூண்டிகோவில் டி..கல்லணை, திருவானைக்காவல் வழியாக 1 பேருந்தும்,தடம் எண்: சி6 செங்கிப்பட்டி-கல்லணை வழி பாதிரக்குடி, அகரப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் வழியாக திருச்சிக்கு 1 பேருந்தும்,தடம் எண்: 6பி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தொண்டராயன்பாடி வழி புங்கனூர் அய்யனாபுரம் தொண்டராயன்பாடி வழியாக பூதலூருக்கு 1 பேருந்தும் என மொத்தம் 3 புதிய பேருந்துகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடங்கள் மூலம் பொதுமக்கள் எந்த ஒரு போக்குவரத்து நெரிசலின்றி நினைத்த இடத்துக்கு விரைவாக செல்வதற்கு இந்த பேருந்துகள் உறுதுணையாக இருக்கும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்  சண்.ராமநாதன்,  தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன், மாவட்டஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமுர்த்தி, பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் செல்லக்கண்ணு, திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல்,  தஞ்சாவூர் கோட்ட மேலாளர்  செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் (TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதியால்  தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது. இந்த அரசுப் போக்குவரத்து கழகத்திலேயே மிகப்பெரிய மண்டலம் அரசுப் போகுக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் ஆகும். இந்த மண்டலம் தான் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழக மண்டலம் ஆகும். இந்த மண்டலம் சுமார் பன்னிரண்டு மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும். இதில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுக்கின்றனர். சுமார் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



Tags:    

Similar News