திருக்காட்டுப்பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை: லயன்ஸ் சங்கம் செய்தது

திருக்காட்டுப்பள்ளி போரூராட்சியில் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக, தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Update: 2021-06-28 12:30 GMT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு நிலைய செயல் அலுவலர் நெடுஞ்செழியன், சுகாதாரத்துறை செயல் அலுவலர் தேன்மொழி,முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் மரியதை செய்யப்பட்டது.

லயன்ஸ் சங்க தலைவர் பழனியப்பன், செயலாளர் ராமசாமி,மற்றும் சுப்பிரமணியம், வஜ்ரவேலு, உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் அவர்களுக்கு  அசைவ உணவும் வழங்கினர்.

Tags:    

Similar News